தொலைதூர பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் செல்லும் வகையில் வெற்றி பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று இன்று தொடங்கி வைத்தார்.!!

சென்னை:
தொலைதூர பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் செல்லும் வகையில் வெற்றி பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் ‘தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒவ்வொரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை தவெக அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், காந்தியடிகள் பிறந்த நாளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட மகளிர் கட்டணமில்லா வெற்றி பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று காலை 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி வைக்க உள்ளார்.

இதன்மூலம், மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.

மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இத்திட்டம் பொருந்தும்.

7 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்பட உள்ள 12,692 பேருந்துகளில் தினசரி 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன் பெறுவார்கள் என போக்குவரத்து துறை கூறியுள்ளது.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘மகாத்மா காந்தி, அகிம்சை என்​னும் ஆயுதத்தை ஏந்​தியவர். ராட்டை என்​னும் நூற்​புச் சக்​கரத்​தின் மூலம் ஒவ்​வொரு இந்​தி​ய​னுக்​கும் பொருளா​தார சுதந்​திரத்​தை​யும், சுய​சார்​பை​யும் போதித்​தார்.

ஒரு கதராடையை நாம் வாங்​கு​வது, ஒரு நெச​வாளரின் கைத்​திற​னுக்கு அளிக்​கும் அங்​கீ​காரம். ஒரு கைவினைப் பொருளை நாம் வாங்​கு​வது, ஒரு கைவினைஞரின் உழைப்​புக்கு அளிக்​கும் மரி​யாதை.

பள்ளி, கல்​லூரி மாணவர்​கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்​கள், இளைஞர்​கள் மற்​றும் தமிழக மக்​கள் அனை​வ​ரும்கதர் ஆடைகளை​யும், கைவினைப் பொருட்​களை​யும் வாங்​கி, நம் நூற்​பாளர், நெச​வாளர் மற்​றும் கைவினைஞர்​கள் வாழ்​வில் புத்​தொளி பாய்ச்ச வேண்​டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதி​வில், ‘‘அக்.2 – காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்​சிகளி​லும் (செங்கல்​பட்​டு, திருப்​பூர் மாவட்​டங்​கள் நீங்​கலாக) கிரா​மசபைக் கூட்​டம் நடை​பெற உள்​ளது. இக்கூட்டத்​தில் பொது​மக்​கள் திரளாகப் பங்​கேற்க வேண்​டும்’’ என்று கூறி​யுள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *