நடிகர் சிபிராஜ் தயாரிப்பாளர் ஆகிறார் !!

தனது அடுத்த படத்தின் மூலம் சினிமா தயாரிப்பாளராகவும் பயணப்பட இருப்பதாக நடிகர் சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்து தான் நடிக்க இருக்கும் படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எடுக்க இருப்பதாக தெரிவித்து இருக்கும் அவர், இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்பதிவில் அவர், ‘எனது அடுத்த படத்தையும், என்னுடைய தயாரிப்பு நிறுவனமான அண்டர்டாக் பிலிம்ஸின் முதல் படைப்பையும் அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்தை எனது நண்பரும், அசாத்தியமான திறமை கொண்ட ‘பென்குயின்’, ‘ஜீப்ரா’ படங்களின் இயக்குநருமான ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

ஒரு சிறந்த கதையைத் திரைக்கு கொண்டு வருவம் இந்தப் பயணத்தை இணைந்து தொடங்குவது மிகுந்த உற்சாகமாக உள்ளது. உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வேண்டும். கூடுதல் தகவல்கள் விரைவில்…’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்துக்கு தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிபிராஜுடன், அவரது மனைவி ரேவதியும் இணைந்து தயாரிக்கிறார்.

சிபிராஜ் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான ‘டென் ஹவர்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *