இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, புரட்டாசி-20 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி இரவு 11.54 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : மகம் இரவு 11 மணி வரை பிறகு பூரம்

யோகம் : சித்த / அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ரங்கநாதர் கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு

ஸன்யஸ்த மஹாளயம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ ராமபிரானுக்கு காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம்.

திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை.

கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு, திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம் வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் – கீர்த்தி

ரிஷபம் – நன்மை

மிதுனம் – வாழ்வு

கடகம் – வரவு

சிம்மம் – செலவு

கன்னி – பக்தி

துலாம் – நட்பு

விருச்சிகம் – பாசம்

தனுசு – வெற்றி

மகரம் – அமைதி

கும்பம் – மகிழ்ச்சி

மீனம் – பண்பு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *