டெல்லியில் போராட்டக் காரர்கள் மீது தாக்குதல்!!

புதுடெல்லி:
டெல்லியில் அக்டோபர் 10 அன்று நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தின்போது, டிடியு மார்க்கில் மாணவர்களைத் தாக்கியதாகவும் பெண்களைத் தள்ளி அடித்ததாகவும் கூறப்படும் வழக்கில், இந்து ரக் ஷா தளம் அமைப்பினர் எனக் கூறிக்கொண்ட 4 பேரை டெல்லி காவல் துறை கைது செய்துள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான தையடுத்து இந்தக் கைது நடந்தது. வீடியோவில் மாணவர்கள் தாக்கப்படுவதும், பெண்கள் தள்ளப்படுவதும் தெரிகிறது.

அருகில் ஒரு காவலர் இருந்ததும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை இளைஞர் காங்கிரஸ், அகில இந்திய மாணவர்கள் சங்கம், சிஜேபி தொடர்பான கணக்குகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தன.

இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் டெல்லி–என்சிஆர் பகுதியை விட்டு தப்ப முயலக்கூடும் என ரகசியத் தகவல் கிடைத்ததால், காவல் துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை களுடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. அன்று ஆயிரக்கணக்கானோர் காவலில் வைக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடைமுறையை நியாயப் படுத்தி, குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

கைதானவர்கள் மீதான வழக்கு பிரிவுகள் இன்னும் வெளியிடப் படவில்லை. அவர்கள் அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களா என்பதும் உறுதியாகவில்லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *