செங்குன்றம் பகுதியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதன் நிறைவாக, வீர மாகாளி அம்மன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் வீரமாகாளி அம்மன் சூரனை வதம் செய்யும் நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வீரமாகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, செங்குன்றம் புதுநகர், பால வாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்கள் வழிபட்டனர்.