சென்னை விமான நிலைய ஓடு தளத்​தில் மழைக்​காலங்​களில் வெள்​ளநீர் தேங்​கு​வதைத் தடுக்க ரூ.22 கோடி மதிப்​பில் தயாரிக்​கப்​பட்ட மழைநீர் வடிகால் திட்​டம் 6 மாதமாக முடக்கம்!!

மீனம்பாக்கம்:
சென்னை விமான நிலைய ஓடு தளத்​தில் மழைக்​காலங்​களில் வெள்​ளநீர் தேங்​கு​வதைத் தடுக்க ரூ.22 கோடி மதிப்​பில் தயாரிக்​கப்​பட்ட மழைநீர் வடிகால் திட்​டம், இந்​திய விமான நிலைய ஆணை​யத்​தின் நிதி ஒதுக்​கீட்​டில் ஏற்​பட்​டுள்ள தாமதத்​தால் முடங்​கி​யுள்​ளது.

சென்​னை​யில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்​பட்ட பெரு​வெள்​ளத்​தின்​போது, சென்னை விமான நிலை​யமும் கடுமையாகப் பாதிக்​கப்​பட்​டது. விமான ஓடுதளத்​தில் வெள்​ளநீர் தேங்​கிய​தால் விமான சேவை​கள் பாதிக்​கப்​பட்​டன.

இதையடுத்து, விமான நிலைய வளாகத்​திலும் அதைச் சுற்​றியுள்ள பகுதி​களி​லும் மழைநீர் தேங்​கு​வதைத் தடுப்​ப​தற்​கான பல்​வேறு நட​வடிக்​கைகள் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

குறிப்​பாக, பல்​லா​வரத்​தில் உள்ள சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் பெய்​யும் மழையால் பெருக்​கெடுக்​கும் நீர், விமான ஓடுதளத்​தில் உள்ள வடிகாலில் செல்ல முடி​யாமல் தேங்​கு​வது முக்​கியப் பிரச்​சினையாக இருந்து வரு​கிறது.

இதற்​குத் தீர்வு காணும் வகை​யில், மழை நீரை முறை​யாக வெளியேற்றி, அடை​யாறு ஆற்​றில் கொண்டு சேர்க்​கும் திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டது.

இதற்​காக விமான நிலை​யத்தை ஒட்​டியுள்ள சாலையை வெட்டி, அதன் வழி​யாக மழைநீரைக் கொண்டு சென்று அடை​யாறு ஆற்​றுடன் இணைக்​கும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டது.

இப்​பணி​யைச் செயல்​படுத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்து நீர்​வளத்​துறை அதி​காரி​கள் ஆய்வு செய்து, விரிவான திட்ட மதிப்​பீட்​டைத் தயாரித்​தனர்.

இந்​திய விமான நிலைய ஆணை​யத்​தின் திட்ட நிதி​யி​லிருந்து தொகையை வழங்​கு​வதற்​காக ஆணை​யத்​தின் உள்​வட்​டாரக் குழு பரிசீலித்து வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இத​னால் தொழில்​நுட்ப ரீதி​யாகத் திட்​டத்​தைச் செயல்​படுத்​து​வதற்​கான ஏற்​பாடுகள் தயாராக இருந்​தும், நிதி ஒதுக்​கீடு இல்​லாததால் பணிகளை செயல்​படுத்த முடி​யாமல் உள்​ளது.

ஓடுதளத்​தில் மழைநீர் தேங்​கு​வது விமானங்​களின் இயக்​கத்​தையும் பாது​காப்பு நடைமுறைகளை​யும் பாதிக்​கக்​கூடும்.

இத​னால் விமான சேவை​களில் தாமதம், விமானங்​களை வேறு விமான நிலை​யங்​களுக்கு மாற்ற வேண்​டிய நிலை உள்​ளிட்ட பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன.

தற்​போது சென்னை விமான நிலை​யத்​தில் பயணிகள் மற்​றும் விமானப் போக்​கு​வரத்து வசதி​களை மேம்​படுத்​தும் வகை​யில் விரிவாக்​கப் பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் நிலை​யில், மழைநீர் வடிகால் வசதியை மேம்​படுத்​து​வதும் முக்​கிய​மானதாகக் கருதப்​படு​கிறது.

எனவே ரூ.22 கோடி மதிப்​பிலான மழைநீர் வடிகால் திட்​டத்​துக்கு இந்​திய விமான நிலைய ஆணை​யம் விரைந்து நிதி ஒதுக்​கீடு செய்து, பணிகளைத் தொடங்க நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது.

இது​குறித்து நீர்​வளத் துறை​யினர் கூறிய​தாவது: சென்னை விமான நிலை​யத்​தில் மழைக்​காலங்​களில் மழைநீர் தேங்​கு​வதைத் தடுப்​ப​தற்​காக ரூ.22 கோடி மதிப்​பில் திட்​டம் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், இந்​திய விமான நிலைய ஆணை​யம் இது​வரை நிதி ஒதுக்​கீடு செய்​ய​வில்லை.

திட்​டத்​துக்​கான நிதியை நீர்​வளத் துறை​யின் வங்​கிக் கணக்​கில் செலுத்​தினால், உடனடி​யாகப் பணிகளைத் தொடங்​கி​விடுவோம்.

நிதி ஒதுக்​கப்​படாததால் பணிகள் முடங்​கி​யுள்​ளன. எனவே, இந்​திய விமான நிலைய ஆணை​யம்​தான் இந்த விவகாரத்​தில் உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *