சென்னை மாநக​ராட்​சி​யில் ரூ.14.80 கோடி மதிப்​பீட்​டில் முடிவுற்ற புதிய பள்ளிக் கட்​டிடங்​கள் மற்​றும் நகர்ப்​புற ஆரம்ப சுகாதார நிலை​யத்தை திறந்து வைத்த அமைச்சர் ராஜ்மோகன்!!

சென்னை:
சென்னை மாநக​ராட்​சி​யில் ரூ.14.80 கோடி மதிப்​பீட்​டில் முடிவுற்ற புதிய பள்ளிக் கட்​டிடங்​கள் மற்​றும் நகர்ப்​புற ஆரம்ப சுகாதார நிலை​யத்தை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்​தார்.

சென்னை மாநக​ராட்சி அண்​ணாநகர் மண்​டலம், 99-வது வார்​டுக்​குட்​பட்ட கங்​காதீஸ்வரர் கோயில் சாலை​யில் அமைந்​துள்ள சென்னை ஆண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் ரூ.6 கோடி மதிப்​பீட்​டில் கூடுதல் பள்​ளிக் கட்​டிடம் கட்​டப்​பட்டு, பள்ளி வளாகம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதில் ‘பிளாக்-பி’ கட்​டிடத்​தில் தரை மற்​றும் முதல் தளத்​துடன் 6 வகுப்​பறைகளும், 2 ஆசி​ரியர் அறைகளும் இடம்​பெற்​றுள்​ளன. ‘பிளாக்-ஏ’ கட்​டிடத்​தில் 10 வகுப்​பறைகள் மற்​றும் பல்​நோக்கு அரங்​கம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், இந்த இரண்டு கட்​டிடங்​களி​லும் சேர்த்து மொத்​தம் 20 ஸ்​மார்ட் வகுப்​பறைகள், சமையலறை, கழிப்​பறைகள், பேவர் பிளாக் தளம், வளாகம் முழு​வதும் கண்​காணிப்பு கேம​ராக்​கள் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதேபோல், திரு.வி.க. நகர் 78-வது வார்​டுக்​குட்​பட்ட தானா தெரு​வில் வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் ரூ.6.50 கோடி செல​வில் சென்னை நடுநிலைப் பள்​ளிக்கு புதிய கட்​டிடம் கட்​டப்​பட்​டுள்​ளது.

1,598 சதுர மீட்​டர் பரப்​பளவில் தரை மற்​றும் இரண்டு தளங்​களு​டன் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இக்​கட்​டிடத்​தில் 18 வகுப்​பறைகள், 2 ஆசி​ரியர் அறைகள், கணினி ஆய்​வகம், கலை​யரங்​கம் மற்​றும் சமையலறை வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இந்​தப் புதிய பள்​ளிக் கட்​டிடங்​களை பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்து பயன்​பாட்​டுக்கு கொண்டு வந்​தார்.

அப்​போது மாணவர்​களு​டன் கலந்​துரையாடி, அவர்​களுக்கு இனிப்பு வழங்​கினார். பள்ளி வளாகத்​தில் மரக்​கன்​றுகள் நட்​டார்.

தொடர்ந்து, வி.வி. கோயில் தெரு​வில் நகர்ப்​புற சுகாதார தேசிய திட்​டம் மற்​றும் மாநக​ராட்சி மூலதன நிதி​யின் கீழ் ரூ.2.30 கோடி மதிப்​பீட்​டில் புதிதாக கட்​டப்​பட்ட நகர்ப்​புற ஆரமப சுகாதார நிலைய கட்​டிடத்​தையும் அமைச்​சர் திறந்து வைத்​தார்.

இந்​நிகழ்​வு​களில் மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்.ஆர்.கவுஷிக், மாமன்ற உறுப்​பினர் பரிதி இளம்​சுருதி, மாநகர நல அலு​வலர் எம்.ஜெகதீசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *