நாம் இல்லாதவருக்கு செய்யும் தான தர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும்!!

நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.

பூமி தானம் – இகபர சுகங்கள்.

ஆடை தானம் – சகல ரோக நிவர்த்தி.

கோ தானம் – பித்ரு சாபம் நிவர்த்தி அடையும்.

தில தானம் (எள்) – பாப விமோசனம் அடையலாம்.

வெல்லம் தானம் – குலம் அபிவிருத்தி அடையும்.

நெய் தானம் – வீடுபேறு அடையலாம்.

தேன் தானம் – இனிய குரல் கிடைக்கும்.

சொர்ண தானம் – கோடி புண்ணியம் உண்டாகும்.

வெள்ளி தானம் – பித்ருகள் ஆசி கிடைக்கும்.

தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.

கம்பளி தானம் – துர்சொப்பனம், துர்சகுன பயம் நிவர்த்தி அடையும்.

பால் தானம் – சவுபாக்கியம்

சந்தனக்கட்டை தானம் – புகழ் கிடைக்கும்.

அன்ன தானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.

தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்ட வாயால் போதும் என சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே. தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *