தெலுங்கு ரசிகர்​கள் என்​னைத் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள் – டாப்ஸி!

சென்னை:
நடிகை டாப்ஸி, தனது திரை​யுலக வாழ்க்​கையை தமிழ், தெலுங்கு படங்​களில் இருந்து ஆரம்​பித்​தார்.

பின்​னர் இந்திக்​குச் சென்ற அவர், சிறந்த கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வரு​கிறார். அவர் நடித்து பிப்​.20-ம் தேதி வெளி​யான ‘அஸ்​ஸி’ படம், வரவேற்பை பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில் அவர் சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் தெலுங்கு சினி​மாவை விமர்​சித்​திருந்​தார்.

“தென்​னிந்​திய சினிமா கவர்ச்​சியை காட்​சிப் படுத்​து​வ​தில் அதி​கம் கவனம் செலுத்​துகிறது. நடிகை​களின் உடலை ஆபாசமாகக் காட்​டு​கின்​றன” என்று கூறி​யிருந்​தார்.

அவர் கருத்தை சமூக வலை​தளங்​களில் ரசிகர்​கள் கடுமை​யாக ட்ரோல் செய்​தனர். தென்​னிந்​திய படங்​களில் நடிக்​கத் தொடங்​கி, வளர்ந்​த​பிறகு அதே சினிமாத் துறையை இழி​வாகப் பேசுவதை வழக்​க​மாக வைத்துள்ளனர் என டாப்ஸி கருத்​துக்கு விமர்​சனங்​கள் எழுந்தன.

இதையடுத்து இப்​போது அளித்​துள்ள பேட்​டி​யில், அப்படியே மாற்றி பேசி​யுள்​ளார் டாப்ஸி.

அதில், “தெலுங்கு சினி​மா​வில், நடிப்​புக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுக்​கும் வேடங்​கள் உள்​ளன. தமிழ் சினி​மா​வில் இது அரி​தாகவே கிடைக்​கும்.

டோலிவுட்​டில் எனக்கு நல்ல வேடங்​கள் கிடைத்​துள்​ளன. தெலுங்கு ரசிகர்​கள் என்​னைத் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.

எனது மதிப்பை உயர்த்​திய படங்​கள் தெலுங்​கில் உரு​வானவை​தான்” என்று கூறி​யுள்​ளார். இதை​யும் நெட்​டிசன்​கள் ட்ரோல் செய்து வரு​கின்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *