முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்தப் படம் அமையும்; ‘டெக்ஸ்லா’ – டீசர் வெளியீடு!

சென்னை:
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘டெக்ஸ்லா’ எனப் தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கிராமத்துப் பின்னணியில், சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.

‘3’, ‘வை ராஜா வை’, ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.

‘வை ராஜா வை’ படத்துக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் அவர் இணைந்துள்ளதால், படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி திட்டமிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்தப் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *