இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “தங்கலான்.” மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து நேற்று வெளியானது.
திரைப்படம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 26.44 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சீயான் விக்ரம் நடித்த படங்கள்ளில் மிகப் பெரிய தொடக்கமாகும். தங்கலான் திரைப்படத்திற்கு வரவேற்பு நன்றாக கிடைத்ததால் இதற்கான பாகம் 2 – ஐ எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இதனை சீயான் விக்ரம் சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார். விரைவில் இப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.