”சிறார் ஆபாச படம் பார்ப்பதும், அவற்றை சேமித்து வைப்பதும் குற்றம் தான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது”!!

சிறார் ஆபாச படம் பார்ப்பதும், அவற்றை சேமித்து வைப்பதும் குற்றம் தான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ரத்து செய்துள்ளது.

அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்தது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல” என்று கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

மேலும், 90ஸ் கிட்ஸ்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகிக் கிடக்கிறார்களோ, அதுபோல 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பார்திவாலா அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், “சிறார் ஆபாச படம் பார்ப்பதும், அவற்றை சேமித்து வைப்பதும் குற்றம் தான். அதேநேரம் இந்த வழக்கில் குற்றத்திற்கான இளைஞரின் மனநிலையை புரிந்துகொள்கிறோம்.

எனவே இதுபோன்ற விசயங்களை தடுப்பதற்கு சில வழிகாட்டுதல்களையும், பரிந்துரைகளையும் இந்த தீர்ப்பில் குறிப்பிடுகிறோம். குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் குழந்தைகளை தவறாக செயலுக்கு உட்புகுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளோம்.

எனவே POCSO சட்டத்தில் பிரிவு19 மற்றும் 21ல் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைக்கிறோம்.

குழந்தைகள் ஆபாசப் படங்கள் என்பதை விட “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்” என்றே குறிப்பிடலாம்.

எனவே நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு முன் தற்போது அவசரமாக “சிறுவர்கள் ஆபாச படம்” என்பதற்கு பதிலாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் என்ற ஒரு அரசாணையை கொண்டு வரலாம் என்று பரிந்துரைத்துள்ளோம்.

குழந்தைகள் ஆபாசம் என எந்த உத்தரவுகளிலும் குறிப்பிட வேண்டாம் என்று அனைத்து நீதிமன்றங்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *