சார்ஜா:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
கடைசி வரை போராடிய கேப்டன் கவுரால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி, மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக வெற்றி பெற்று அசத்தி உள்ளது.
மேலும், ஆஸ்திரேலியா தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.