இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளி பண்டிகையை ஓட்டி தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றும், மூன்று நாட்களில் சுமார் 5 லட்சத்து 83 ஆயிரம் பேர் இந்த பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.