”எனக்கு தாய்மை அடைய வேண்டும் என்பது கனவு” – நடிகை சமந்தா!!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், ”எனக்கு தாய்மை அடைய வேண்டும் என்பது கனவு. அந்த உணர்வை பெற வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

நான் இப்படி சொன்னதும் எல்லோரும் எனது வயதை பற்றி பேசுவார்கள். ஆனால் தாயாவதற்கு வயது தடையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடரில் குழந்தைகளுடன் இணைந்து நடித்தேன். அது சிறந்த அனுபவமாக இருந்தது.

எனது உடல் நலம் நன்றாக உள்ளது. வாழும் ஒவ்வொரு நாளையும் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *