குழந்தைகள் தினமான இன்று, உலகின் எதிர்காலமாக விளங்கும் குழந்தை களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் – பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வாழ்த்து!!

குழந்தைகள் தினத்தையொட்டி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்றும் நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டுக்கான குழந்தைகள் தின கருப்பொருள் அனைத்து குழந்தைகளும், அனைத்து உரிமைகளும் ஆகும். இந்த நிலையில், குழந்தைகள் தினத்தையொட்டி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழலைச் செல்வங்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அவர்கள் தான் “நாட்டின் எதிர்காலம்”. குழந்தைகள் தினமான இன்று, உலகின் எதிர்காலமாக விளங்கும் குழந்தைகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை அணைத்து துறையிலும் உங்கள் அர்ப்பணிப்பும் பணியும் சிறக்க வாழ்த்துகிறேன். குழந்தைகள் வானத்திலிருந்து வரும்மலர்கள். இந்த பூமியை குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான மற்றும் சிறந்த இடமாக மாற்ற உறுதிமொழி எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *