26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களைப் பெறுவதற்கான இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று ஒப்பந்தம்!!

புதுடெல்லி:
26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களைப் பெறுவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது.

இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க் கப்பல்​களில் பயன்​படுத்​து​வற்​காக 45 மிக்​-29கே ரக போர் விமானங்​கள் உள்​ளன. இவை அனைத்​தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்​லியன் டாலர் மதிப்​பில் வாங்​கப்​பட்​ட​வை.

கடற்படை பயன்​பாட்​டுக்​கான போர் விமானங்​களை உள்நாட்​டில் தயாரிக்க இன்​னும் 10 ஆண்​டுகளுக்கு மேல் ஆகும். இதனால், பிரான்​ஸிட​மிருந்து 26, ரஃபேல்​-எம் ரக போர் விமானங்​களை வாங்க கடற்​படை முடிவு செய்​தது.

இதற்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையி​லான பாது​காப்பு கொள்​முதல் கவுன்​சில் கடந்​த ஆண்டு செப்​டம்​பரில் ஒப்​புதல் வழங்​கியது.

இந்த விமானங்க​ளை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலை​மையி​லான மத்திய அமைச்​சரவை கடந்த 9-ம் தேதி ஒப்புதல் அளித்​தது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் 22 ஒற்றை இருக்கை ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் மற்றும் நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்கள் அடங்கும்.

இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தான பிறகு 37 முதல் 65 மாதங்​களுக்​குள் 26 ரஃபேல் போர் விமானங்​கள் இந்தி​யா​வுக்கு வழங்​கப்​படும். 2030-31-ம் ஆண்டுக்​குள் அனைத்து விமானங்களும் வழங்​கப்​படும்.

ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள், பழைய மிக்-29கே-க்கு பதிலாக, ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவிலிருந்து இயக்கப்படும். இந்திய விமானப்படை (IAF) ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்களை இயக்குகிறது.

இந்தப் புதிய ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள மொத்த ரஃபேல் ஜெட் விமானங்களின் எண்ணிக்கையை 62 ஆக உயர்த்தும், இது நாட்டின் 4.5 தலைமுறை போர் விமானங்களின் கடற்படையை கணிசமாக அதிகரிக்கும்.

இதுதவிர பிரான்ஸிட​மிருந்து ரூ.33,500 கோடியில் 3 ஸ்​கார்​பீன் ரக நீர்​மூழ்கி போர்க்​கப்பல்​கள் வாங்​கு​ம் ஒப்​பந்​த​மும் இறுதி செய்​யப்​பட்டு வரு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *