”திருமணத்தை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்”!!

தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மேனகா Keerthy suresh menaka திருமணம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *