புயல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, மளிகைப்பொருள், பிரட் உள்ளிட்ட தொகுப்பு பைகள் அனுப்பபட்டு வருகின்றன.
இதனை கூடுதல் தலைலை செயலர் மணிவாசகம், உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் நடைப்பெற்று வருகின்றன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வந்துள்ளது.
அவற்றை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று சேர்ப்பதற்காக 800 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 91 நடைபெற்று வருகிறது, உணவு தேவை என்று அவர்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தேவை என்பவர்களுக்கு உணவு பொருட்கள் அதிக விரைவு வாகனம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 240 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இன்று மட்டும் 136 மருத்துவ முகாம்கள் சேவை செய்கின்றன, மின்சாரம் வழங்க சில இடங்களில் காலதாமதம் ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக இலவசமாக வழங்கப்படும்” என்றார்.