விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு தெரியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
இவர் தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார்.
அத்துடன் தன்னுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், கூட்டணி அழுத்தம் காரணமாக திருமாவளவன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என கூறினார்.
இந்த நிலையில், விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு தெரியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் என தெரிவித்த திருமாவளவன், எதிர்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு “எனக்கு தெரியாது” என பதில் அளித்தார்.
அவர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி இல்லை என்று மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.