சென்னை;
இடைக்கால ஜாமின் தொடர்பான ஆவணங்கள் தாமதமாக கிடைத்ததால், நடிகர் அல்லு அர்ஜூன் சஞ்சல்குடா சிறையில் ஓர் இரவை கழித்தார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் நாடு முழுவதும் டிசம்பர் 05ம் தேதி வெளியாகி வசூல் வேட்டையைக் குவித்து வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். மைத்ரி மூவி தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது, ஹைதராபத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், இடைக்கால ஜாமின் தொடர்பான ஆவணங்கள் தாமதமாக கிடைத்ததால், நடிகர் அல்லு அர்ஜூன் சஞ்சல்குடா சிறையில் ஓர் இரவை கழித்தார்.
சாப்பிடாமல், தரையில் படுத்து தூங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால ஜாமின் தொடர்பான ஆவணங்கள் இன்று கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.