Skip to content
- அரிசி ஊற வைப்பது போல பருப்பையும் ஊற வைத்து சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.
- தேங்காய் பர்பி செய்யும் போது தேங்காயுடன் கேரட்டையும் துருவி சேர்த்து செய்தால் பர்பி கலர்புல்லாக இருக்கும்.
- ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், ஏலக்காய் எளிதில் தூளாகி விடும்.
- பஜ்ஜி மாவுடன் ஓமம் சேர்த்து செய்தால் பஜ்ஜி நல்ல மணத்துடன் இருக்கும்.
- கேசரி செய்யும் போது தண்ணீரின் அளவைக் குறைத்து, பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
- முளைக்கீரை வேகும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.
- மோர் ஊற்றி வெண்டைக்காயை வதக்கினால் வழவழப்பு தன்மை போய்விடும்.
- மீதமுள்ள காய்கறி பொரியல்களை தோசை மாவுடன் கலந்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அடை மாதிரி ஊற்றலாம்.
- பிரெட்டை வெட்டும் பொழுது கத்தியை வெந்நீரில் நனைத்து வெட்டவும்.
- பூண்டு வாங்கியவுடன் உதிர்த்து வைத்தால் வீணாகாமல் இருக்கும்.