இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக…!

  • ரவா கேசரி தயாரிக்கும்போது அதில் ஆப்பிள், அன்னாசி, திராட்சை, மாம்பழத் துண்டுகளை, இறக்கும் முன் கலந்து கிளறவும். வித்தியாசமான பழக்கேசரி தயார்.
  • நறுக்கிய ஆப்பிள் பழங்கள் வாடாமல் இருக்க சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு கலந்து வைக்கலாம்.
  • ஏலக்காயை பொடித்து போட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். அப்படியே குடிக்கும் நீரில் போட்டால் போதும். மணமும், ருசியும் சேர்ந்த நீரை பருகலாம்.
  • பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பதற்கு முன்னால் கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் அதில் உள்ள பால் கைகளில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். வெட்டுவதற்கும் சவுகரியமாக இருக்கும்.
  • பீன்ஸ் காய்ந்துவிட்டால் அதை வேகவைத்த பிறகுதான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் விரைவாக வேகாது.
  • வடை தயார் செய்யும்போது மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.
  • எந்த வகை குழம்பிலும் கடலை மாவை தனியாக கரைத்து, பின்னர் குழம்பில் சேர்த்தால் குழம்பு கெட்டியாகிவிடும்.
  • மசாலா, குருமாக்களில் காரம் கூடுதலாகிவிட்டால் சிறிது தயிரை கடைந்து சேர்க்கவும் அல்லது தேங்காய்ப்பாலை விடவும். தேங்காய்ப்பாலை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக பசும்பாலை சேர்த்துக்கொள்ளலாம்.
  • பருப்பு உசிலியை பீன்சுக்கு பதிலாக வெண்டைக்காய், பாகற்காய் இவற்றிலும் செய்யலாம்.
  • அல்வா கலவையை மிகவும் கெட்டியாக வரும் வரை வைக்கக்கூடாது. அடை மாவு பதத்தில் எடுத்தால் ஆறும்பொழுது சரியாக இருக்கும்.
  • கீரையை கூட்டு செய்வதற்கு சிறிது சிறிதாக நறுக்காமல் ஒன்றிரண்டாக பிய்த்து அளவான தண்ணீரில் குக்கரில் வேகவிட்டு மிக்சியில் லேசாக அரைக்கவும். அரிந்தது போல மசிந்து விடும். சத்தும் கெடுவதில்லை.
  • வாணலியில் ஏதேனும் உணவுப்பதார்த்தங்களை வறுக்கும்போதோ அல்லது பொரிக்கும்போதோ எண்ணெய் பொங்குமானால், சிறிது புளியை எண்ணெய்யில் போட்டால் போதும், பொங்காது.
  • கொழுப்புச்சத்தை குறைக்க விரும்புபவர்கள் பன்னீரை பொரிக்காமல் பயன்படுத்தலாம்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *