திராட்சை பழத்தில் வைட்டமின் டி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை உடல் ஆரோக்கியத்திற்கும் சரும அழகிற்கும் பெரிதும் உதவுகின்றன. இதை உட்கொள்வதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
குறிப்பாக, கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஆர்கானிக் அமிலங்கள் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கின்றன.
புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் பண்பு கொண்ட திராட்சை, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும், சிறுநீரக செயல்பாட்டை சீராக்குவதுடன், இதிலுள்ள லிவோலியிக் அமிலம் முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி கூந்தல் உதிர்வை தடுக்கிறது.
தினசரி உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.