பிரிஸ்பேன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது. டிராவிஸ் ஹெட் 152 ரன்னும், ஸ்டீவ் சுமித் 101 ரன்னும் , அலெக்ஸ் கேரி 70 ரன்னும் எடுத்தனர். பும்ரா 6 விக்கெட்டும், முக மது சிராஜ் 2 விக்கெட்டும், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன் னிங்சை ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர் களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்து இருந்தது.
ஜெய்ஸ்வால் (4 ரன்), சுப்மன் கில் (1), விராட் கோலி (3), ரிஷப் பண்ட் (9) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். கே.எல். ராகுல் 33 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. நேற்றைய 3-வது நாள் போட்டியும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 394 ரன்கள் பின்தங்கி, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார். அவர் 10 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 74 ஆக இருந்தது. அடுத்து ஜடேஜா களம் வந்தார்.
மறுமுனையில் இருந்த கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். அவர் 85 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 56-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 17-வது அரை சதமாகும். அவருக்கு ஜடேஜா உறுதுணையாக இருந்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 84 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 139 பந்துகளில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை தொட்டார். நாதன் லயன் அவரது விக்கெட்டை கைப்பற்றினார்.
அப்போது ஸ்கோர் 141-ஆக இருந்தது. இந்த ஜோடி 67 ரன் எடுத்தது. 7-வது விக்கெட்டும் ஜடேஜாவுடன், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தார்.
மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து இருந்தது. ஜடேஜா 41 ரன்னும், நிதிஷ் குமார் ரெட்டி 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரை சதம் அடித்து அசத்தினார். இந்த டெஸ்டில் இந்தியா பாலோ ஆன் நிலையில் உள்ளது. பாலோ ஆனை தவிர்க்க 246 ரன் எடுக்க வேண்டும்.