தமிழகத்தில் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது – சட்டப்பேரவையில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை:
தமிழகத்தில் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது என உணர்ச்சிவசப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆளுநர் வருகிறார் உரையாற்றாமல் சென்று விடுகிறார், சட்டப்படி பேரவையில் உரையாற்ற வேண்டும்.

தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை. தான் வகிக்கும் பதவி, பொறுப்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார். பேரவை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும், அதை சொன்னால் ஏற்க மறுக்கிறார். பேரவை மாண்பை மதிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் அவமதித்துள்ளார்.

விடியல் பயணத்திற்கு ஸ்டாலின் பஸ் என்று மக்கள் பெயர் சூட்டியது தான் “விடியல்”. திராவிட மாடல் என்றால், சமத்துவம், சமூக நீதி. அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டால் பிரச்சினையில்லை.ரவுடிகள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறினார். இதனிடையே தமிழகத்தில் மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது என உணர்ச்சிவசப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *