சென்னை:
நிர்மலா சீதாராமனின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் பாஜக முன்னாள் எம்.பி.யும் உத்தரகண்ட் போர் நினைவுச்சின்னத் தலைவருமான தருண் விஜய், சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் சித்திர வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட ‘வாரியர் டெமாக்ரடிக் என்ற காபி’புத்தகத்தை நிர்மலா சீதாராமனுக்கு தருண் விஜய் பரிசாக வழங்கினார்.
மேலும் இந்த சந்திப்பின்போது எல்லை மாநிலங்களின் வளர்ச்சி குறித்து நிதி அமைச்சருடன் ஒரு சுருக்கமான கலந்துரையாடலையும் அவர் நடத்தினார். மேலும் மத்திய பட்ஜெட்டில் உத்தரகண்டின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தியதற்காக நிர்மலா சீதாராமனுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தருண் விஜய், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறந்த மேம்பாட்டுத் திட்டங்களை உத்தரகாண்ட் மக்களுக்கு வழங்கி மாநில வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான முதல்வராக இருக்கும் முதலமைச்சர் ஸபுஷ்கர் சிங் தாமியின் இடைவிடாத முயற்சிகளை தருண் விஜய் பாராட்டினார்.
”இன்னும் சில ஆண்டுகளில், கல்வி நிறுவனங்கள், அனைத்து வானிலை சுற்றுலா, அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் அதிக தனிநபர் வளர்ச்சி விகிதம் ஆகியவற்றில் உத்தரகாண்ட் மாநிலம் முழு இமயமலைப் பகுதியையும் வழிநடத்தப் போகிறது” என்று தருண் விஜய் பெருமையுடன் தெரிவித்தார்.