இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை!!

சென்னை:
வெளிநாடுகளை சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு இணையதளங்கள் ஜிஎஸ்டியை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து வருகின்றன.

அத்தகைய இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரம் தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது. இதன் மூலம் ரூ.126 கோடி முடக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *