மலையாள சினிமாவில் களமிறங்கும் ப்ரீத்தி முகுந்தன்!!

சென்னை;
கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தார் நடிகை ப்ரீத்தி முகுந்தன். அதைத்தொடர்ந்து இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் வெளியான `ஆச கூட’ வீடியோ பாடலில் நடித்து இருந்தார். இதன் மூலம் மிகப்பெரிய வைரலானார்.

தற்பொழுது பான் இந்தியன் திரைப்படமாக உருவாகி இருக்கும் கண்ணப்பா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்க விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் மலையாள சினிமாவில் களம் இறங்கியுள்ளார். மலையாளத்தில் மெயின் பியார் கியா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநரான ஃபைசல் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக ஹ்ரிது ஹருன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் முரா, All We Imagine As Light போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களுடன் அஸ்கர் அலி, மிதுன், ஜெகதிஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியொ பேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது.


ஸ்பைர் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் முகத்தில் ரத்த காயங்களுடன் ஹரூன் நிற்க பக்கத்தில் கையில் கத்தியுடன் ப்ரீத்தி முகுந்தன் நிற்கிறார். படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *