கேரளா:
கேரள எல்லைப் பகுதியில் உள்ள பாலருவி நீர்வீழ்ச்சி கோடை காரணமாக மூடப்பட்டது எனவே மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என அம் மாநில வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக எல்லைப் பகுதியில் கேரள மாநிலம் ஆரியங்காவு அருகே பாலருவி நீர்வீழ்ச்சிஉள்ளது.
இந்த அருவிக்கு கேரளா சுற்றுலா பயணிகளை விட தமிழக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதுண்டு வழக்கம். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பலர்இந்த அருவிக்கு சென்று வருவர்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக வெயில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
இதன் காரணமாக நாளை (29ஆம் தேதி முதல்) பாலருவி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் இருந்து, தமிழக சுற்றுலா பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை பாலருவி நீர்வீழ்ச்சிக்கு வர வேண்டாம் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.