பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்!!

சென்னை:
பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் காமெடிக்கு புகழ் போனவர்கள் கவுண்டமணி-செந்தில். 80 காலட்டங்களில் தொடங்கிய இவர்களது காமெடி கூட்டணி தற்போது வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் தமிழ் சினிமாவில் காமெடி கதாநாயகர்களாக கொடிகட்டி பறந்தனர்.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கவுண்டமணி. நூற்றுக்கணக்கான படங்களில் இவர் காமெடி நடிகராக நடத்துள்ளார்.

சமீபத்தில் இவர் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

நடிகர் கவுண்டமணி சாந்தி என்ற பெண்ணை கடந்த 1963ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கவுண்டமணியின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67. அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *