சென்னை:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டுள்ளார். அவரது பதிவில்,
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையைச் சொன்னால், இந்த வடிவம் என்னை அழைத்துச் செல்லும் பயணம் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.
அது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, மேலும் நான் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
வெள்ளை நிற ஜெர்சியில் விளையாடுவது தனிப்பட்ட முறையில் தனது மிகவும் பிடித்தமானது” என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் அடித்துள்ளார்.