இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-12 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காைல 11.30 மணி வரை பிறகு அமாவாைச
நட்சத்திரம்: பரணி காலை 7.36 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ அமாவாசை, கார்த்திகை விரதம், திருவல்லிக்கேணி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்
இன்று சர்வ அமாவாசை. கார்த்திகை விரதம். ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தங்க ரதக்காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில் பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமானுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-சாதனை
கடகம்-வரவு
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-திடம்
துலாம்- உறுதி
விருச்சிகம்-அமைதி
தனுசு- களிப்பு
மகரம்-பாராட்டு
கும்பம்-ஆதரவு
மீனம்-சிறப்பு