‘தொடரும்’ திரைப்படம் வரும் 30ம் தேதி Jio Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு!!

சென்னை:
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `தொடரும்’ படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு இது 360 – வது படம் ஆகும். தொடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 1 வாரத்தில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியது.

இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.


இதனால் மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த திரைப்படமாக தொடரும் உருமாறியுள்ளது. இத்திரைப்படம் இதுவரை உலகளவில் 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இந்நிலையில், ‘தொடரும்’ திரைப்படம் வரும் 30ம் தேதி Jio Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *