சென்னை:
கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது பிச்சைக்காரன் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்பொழுது மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்பொழுது விஜய் ஆண்டனியுடன் தன் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அக்கதை இரண்டு ஹீரோ கதை எனவும், விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷன் நடிக்க இருப்பதாக கூறினார்.
இந்த வெற்றி கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.