இந்த வார விசேஷங்கள்
3-ந் தேதி (செவ்வாய்)
- திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் உலா.
- மதுரை கூடலழகர் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
- பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
- நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி கேடய சப்பரத்தில் பவனி.
- கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
- சிவகாசி விசுவநாதர் ரத உற்சவம்.
- காளையார்கோவில் சிவ பெருமான், திருப்பத்தூர், திருத்தணிநாதர் தலங்களில் திருக்கல்யாணம்.
- பழனி ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யாளி வாகனத்தில் உலா.
- மேல்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
- முகூர்த்த நாள்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் வெள்ளி ரத உற்சவம்.
- மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.
- திருவாடானை, நயினார் கோவில், திருப்பத்தூர் தலங்களில் சுவாமி வெள்ளி விருட்சப சேவை.
- மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
- முகூர்த்த நாள்.
- சுமார்த்த ஏகாதசி.
- மாயவரம் கவுரிமாயூர நாதர் திருக்கல்யாணம்.
- காஞ்சிபுரம் கோட்டம் குமரக் முருகப் பெருமான் ரத உற்சவம்.
- சமநோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
- சர்வ ஏகாதசி.
- மதுரை பெருமாள் கூடலழகர் யானை வாகனத்தில் பவனி.
- காட்டுபருவூர் ஆதி கேசவப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்சப சேவை.
- சமநோக்கு நாள்.
8-ந்தேதி (ஞாயிறு)
- முகூர்த்த நாள்.
- பிரதோஷம்.
- பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணம்.
- நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி ரத உற்சவம்.
- அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
- சமநோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
- வைகாசி விசாகம்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிஷேகம்.
- திருப்பத்தூர், திருத்தணிநாதர் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவம்.
- கீழ்நோக்கு நாள்.