கூட்​ட​ணி​யில் குழப்​பம் இல்​லை; எங்​கள் கூட்​ட​ணி​தான் 2026-ல் வெற்றி பெறும் – எல்.முருகன் கருத்து…

திருச்சி / சென்னை:
தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி குறித்​தும், முதல்​வர் வேட்​பாளர் யார் என்​பது குறித்​தும் மத்திய அமைச்சர் அமித்​ஷா​வும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பேசி முடி​வெடுப்​பார்​கள் என்று மத்​திய இணை அமைச்​சர் எல்.முருகன் கூறி​னார்.

திருச்​சி​யில் முப்​படை ஓய்​வூ​தி​யர்​களுக்​கான மாபெரும் குறைதீர் கூட்​டத்தை மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் நேற்று தொடங்​கி​வைத்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

திமுக​வினர் தோல்வி பயத்​துடன் ஆட்சி நடத்தி வரு​கின்​றனர். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் வெற்றி மூலம் திமுகவை வீட்​டுக்கு அனுப்​புவோம். முதல்​வர் செயல்​ப​டாததன் விளை​வாக லாக்​கப் மரணம் நடந்​துள்​ளது.

காவல் நிலை​யத்துக்கு செல்​லவே மக்​கள் அச்​சப்​படு​கிறார்​கள். முதல்​வரின் உத்​தரவை எந்த அதி​காரி​யும் பின்​பற்​று​வ​தில்​லை. அதி​காரி​கள் ஆட்​சி​தான் தமிழகத்​தில் நடக்​கிறது. அவர் சரி​யாக செயல்​பட​வில்​லை. திமுகவுட​னான கூட்​ட​ணிக்​காக தமிழக மக்களின் நலனை கூட்​ட​ணிக் கட்​சிகள் அடகு வைத்து விட்​டன.

துறை அமைச்​சர் என்ற முறை​யில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானின் ஸ்டூடியோவை பார்​வை​யிட்​டேன். அவரிடம் அரசி​யல் எது​வும் பேச​வில்​லை. தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில்​தான் தேசிய ஜனநாயக கூட்​டணி இயங்​கும் என்று மத்​திய அமைச்​சர் அமித்ஷா கூறி​விட்​டார்.

தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி குறித்​தும், முதல்​வர் வேட்​பாளர் குறித்​தும் அமித்​ஷா​வும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பேசி முடி​வெடுப்​பார்​கள். இதில் நான் கருத்து கூற முடி​யாது.

கூட்​ட​ணி​யில் குழப்​பம் இல்​லை. எங்​கள் கூட்​ட​ணி​தான் 2026-ல் வெற்றி பெறும். இவ்​வாறு எல்​.​முரு​கன் கூறி​னார்.சென்னை விமான நிலை​யத்​தில் எல்​.​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தமிழகத்தில் காவல் துறை​யின் மொத்த செயல்​பாடும் பூஜ்ஜிய​மாக இருக்​கிறது. இதையெல்​லாம் கவனிக்க வேண்​டிய முதல்​வர், கடந்த 4 ஆண்​டு​களாக தூக்​கத்​தில் இருக்​கிறார்.

திமுகவை வீட்​டுக்கு அனுப்​புவது​தான் எங்​களது ஒரே குறிக்​கோள். ஒரு​மித்த கருத்​துடைய கட்​சிகள் எங்​களு​டன் இணைய வேண்டும். துணை முதல்​வர் பதவியை ஸ்டா​லினிடம் கேட்டு வாங்​கும் தைரி​யும் திரு​மாவளவனுக்கு உள்​ள​தா? இவ்​வாறு அவர்​ கூறினார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *