நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது கூலி பவர் ஹவுஸ் பாடல் அல்லது பூஜா ஹெக்டே பாடலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.