கண்ணை சுற்றி கருவளையமா கவலையை விடுங்க… உங்களுக்காக சில டிப்ஸ்…..

முகத்தை வைத்துத்தான் ஒருவரின் அகத்தை எடை போடுகிறார்கள். ஆனால் சிலருக்கு கண்களுக்கு கீழ் உருவாகும் கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது.


தூக்கமின்மை, மனஅழுத்தம், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவது ஆகியவை முதன்மை காரணங்களாக இருந்தாலும், மரபணு மாற்றம், வாழ்க்கை முறை போன்றவற்றாலும் கண்ணில் கருவளையம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்யும் முறைகளை பார்ப்போம்…

  • சிறிதளவு தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையத்தின் மீது தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
  • கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி, 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.
  • உருளைக்கிழங்கு சாறை எடுத்து கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
  • வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.
  • காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.
  • பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.
  • கிரீன் டீ போட்டவுடன் அதன் பேக்குகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து, ஆறிய பின் கண்களில் வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.
  • தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.
  • ரோஸ் வாட்டரை பருத்தி துணி அல்லது பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் 15 நிமிடங்களுக்கு வைத்து எடுக்க வேண்டும். தினசரி இதனை தொடர்ந்து செய்து வர, கருவளையம் நீங்கும்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *