சென்னை:
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் லோகா. இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகிறது.
துல்கர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் 28 ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இந்தநிலையில், நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‘லோகா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் வுமனாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.