அதி​முக தேமு​திக கூட்​டணி ஒப்​பந்​தத்​தில் மாநிலங்​களவை சீட் தரு​வ​தாகக் கூறி பழனி​சாமி நம் முதுகில் குத்​தி​விட்​டார் – பிரேமலதா குற்றச்சாட்டு!!

சென்னை:
அதி​முக தேமு​திக கூட்​டணி ஒப்​பந்​தத்​தில் மாநிலங்​களவை சீட் தரு​வ​தாகக் கூறி பழனி​சாமி நம் முதுகில் குத்​தி​விட்​டார் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நிர்​வாகி​கள் மத்​தி​யில் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.

சென்​னை​யில் தேமு​திக தென்​சென்னை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்றது. இதில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா பேசி​ய​தாவது:

செப்​டம்​பர் மாத இறு​திக்​குள் பூத் கமிட்டி பணி​களை நிறைவு செய்ய வேண்​டும். தேர்​தலுக்கு சில மாதங்​களே உள்ள நிலை​யில் கடின​மாக உழைக்க வேண்​டும்.

மேலும், அதி​முக-வுடன் 2024 நாடாளு​மன்ற தேர்​தலில் கூட்​டணி அமைத்​த​போது 5 மக்​களவை தொகு​தி​களும், 1 மாநிலங்​கவை​யும் ஒதுக்​கு​வ​தாக தெரி​வித்​தனர். ஆனால் அந்த சீட் நமக்கு கொடுக்​க​வில்​லை.

சீட் தரு​வ​தாக கூறி பழனி​சாமி நம்மை முதுகில் குத்​தி​விட்​டார். முதல்​வ​ராக இருந்​தவர், கட்சி தலை​வ​ராக இருக்​கிறார், கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்​று​வார் எனநம்​பினோம். ஆனால் ஏமாற்​றி​விட்​டார்.

எம்​ஜிஆர், ஜெயலலிதா காலத்​தில் கூட்​டணி குறித்த ஒப்​பந்​தத்​தில் தேதி குறிப்​பிட்டு கையெழுத்​திடு​வ​தில்​லை, அதே​போல​தான் தேமு​தி​க​வுடன் கூட்​டணி ஒப்​பந்​தத்​தில் தேதி குறிப்​பிட வேண்​டாம் என இபிஎஸ் கேட்​டார்.

அதனால் நம்​பிக்​கை​யின் பேரில் கையெழுத்​திட்​டோம். அதனால்​தான் நாம் ஏமாந்​து​விட்​டோம். பழனி​சாமி​யின் பிரச்​சார கூட்​டத்​துக்கு காசு கொடுத்து தான் அழைத்து வரு​கிறார்​கள். இவ்​வாறு அவர் பேசினர்.

இந்​தக் கூட்​டத்​தில் பேசிய தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ், “தே​மு​திக எந்த கூட்​ட​ணி​யில் இடம்​பெறுகிறதோ அந்த கூட்​ட​ணி​தான் 2026 தேர்​தலில் அமோக வெற்றி பெறும். சட்​டப்​பேர​வை​யில் பிரேமலதா எனும் நான் என்ற குரல் 2026-ல் ஒலிக்​க​போவது உறு​தி” என கூறி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பிரேமலதா கூறிய​தாவது: இரண்​டாம் கட்ட மக்​கள் சந்​திப்பு பயணம் செப்​.5-ம் தேதி திரு​வண்​ணா​மலை​யில் தொடங்​கும். விஜய​காந்த்​துக்​கும், மூப்​ப​னாருக்​கும் 40 ஆண்​டு​கால நட்பு இருந்​தது.

எங்​களது திரு​மணம் மூப்​ப​னார் மற்​றும் கருணாநிதி தலை​மை​யில்​தான் நடந்​தது. அந்த அடிப்​படை​யில் தான் நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் தேமு​திக கலந்​து​கொண்​டது.

முதல்​வரின் வெளி​நாடு பயணம் சிறப்​பாக அமைய வாழ்த்​துக்​கள். அவரது பயணம் தமிழகத்​துக்கு முதலீடு​களை ஈர்க்​கும் விதத்​தில் உபயோக​மாக இருக்க வேண்​டும்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் கூட்​டங்​களுக்கு காசு கொடுத்து ஆட்​கள் வரவழைக்​கப்​படு​கின்​றனர் என்​பது நான் சொல்லி தெரிய வேண்​டிய​தில்​லை.

அனைத்து கட்சி கூட்​டங்​களுக்​கும் காசு கொடுத்​து​தான் மக்​களை அழைத்து வரு​கின்​றனர். இதில் தேமு​தி​க வி​தி​விலக்​கு. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *