ஈரோடு,
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று ‘கெடு’ விதித்து இருந்தார்.
இந்த சூழலில், அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சுழலில், செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அவர் கூறியதவது;
“அதிமுக மபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் கட்சி ஒன்றிணைப்பு பற்றி பேசினேன். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என்றுதான் கூறினேன். கட்சி நலனுக்காகவே கூறினேன். எனது நலனுக்காக அல்ல.
ஜனநாயக முறைப்படி, பொறுப்புகளில் இருந்து நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எனது பதவியை பறித்துள்ளார்கள். என் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும். எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும். என் கருத்தை நான் கூறிவிட்டேன். உங்கள் கருத்துகளுக்கு பொதுசெயலாளர்தான் பதில் கூற வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு,
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று ‘கெடு’ விதித்து இருந்தார்.
இந்த சூழலில், அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சுழலில், செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அவர் கூறியதவது;
“அதிமுக மபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் கட்சி ஒன்றிணைப்பு பற்றி பேசினேன். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என்றுதான் கூறினேன். கட்சி நலனுக்காகவே கூறினேன். எனது நலனுக்காக அல்ல.
ஜனநாயக முறைப்படி, பொறுப்புகளில் இருந்து நீக்கும் முன்பு என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலேயே எனது பதவியை பறித்துள்ளார்கள்.
என் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும். எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும். என் கருத்தை நான் கூறிவிட்டேன். உங்கள் கருத்துகளுக்கு பொதுசெயலாளர்தான் பதில் கூற வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.