‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்வில் பங்கேற்கிறார்-தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி…..

சென்னை:
தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  • 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்
  • 2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.
  • 14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • 500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது”
  • கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
  • நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 25ம் தேதி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
  • தமிழ்நாடு அரசு நடத்தும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி .சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். என்று தெரிவித்தார்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *