ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை திராவிட மாடல் உருவாக்கி வருகிறது !! “நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்….

சென்னை,
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளது. 4 ஆண்டுகளில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு வேலைவாய்ப்பு உருவாக்கம் தான்.

அந்த வகையில், 2021-ஆம் ஆண்டு திருச்சியில் நான் உறுதியளித்த அளவான ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை திராவிட மாடல் உருவாக்கி வருகிறது. நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *