தென்காசி
செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
செக்கடி விநாயகர் கோவிலில் காலையில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மாலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.
இதே போல் செங்கோட்டை அஞ்சல் அலுவகத்தில் பால விநாயகர், மற்றும் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆனந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
இதே போன்று வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர்.