கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்றில் அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடராஜர் வாகன பவனி!!

கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்றில் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. அகத்திய மாமுனிவர் வழிபட்ட தலம் என்பதால் இந்த இடம் அகஸ்தீஸ்வரம் என்று பெயர் பெற்றது. இங்கு அகத்தியருக்கு தனி கோவிலும் உள்ளது .

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஐப்பசி திருவாதிரையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள் பொடி, மாபொடி, இளநீர், பன்னீர், சந்தனம், களபம், விபூதி, தேன் பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின்னர் நடராஜ பெருமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.


இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக திருவாதிரை களி வழங்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *