சென்னை:
“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.
காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசுகையில், “வாக்குகளை திருடிவிட்டார்கள் என்று சொல்லிவந்தார் ராகுல் காந்தி.
ஆனால் பிஹார் மக்கள், எங்கள் ஓட்டு எங்களிடம் தானே இருக்கிறது எனக் கூறி, பொய் சொல்பவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அவருக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார்.