தமிழக வரலாறு குறித்து ஆய்​வு செய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!!

சென்னை:
எழும்​பூரில் உள்ள ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​கள் உதவி​யுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்​வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை எழும்​பூரில் இயங்கி வரும் பழமை​யான தமிழ்நாடு ஆவணக் காப்​பகத்​தில் 1633-ம் ஆண்டு முதலான புத்​தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமை​யான ஆவணங்​களும் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

தமிழகத்​தின் வரலாற்றை அனை​வரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்​கில் 1973-ல் தொடங்​கப்​பட்ட தமிழ்​நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்​றம், மாறிவரும் காலத்​திற்​கேற்ப மீளுரு​வாக்​கம் செய்​யப்​படும் என்​றும், ஆண்​டு​தோறும் 10 முதல் 15 ஆய்​வு​கள் வரை மேற்​கொள்​ளப்​படும் என்​றும் சட்​டப்​பேர​வை​யில் முதல்வ​ர் அறிவித்தார்.

அதன்​படி, 20 நபர்​களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்​கப்​பட்டு வரலாற்று ஆய்​வு​கள் மேற்​கொள்​ள​வும் ஆணை​கள் வெளி​யிடப்​பட்​டன.

தமிழ்​நாடு ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​களை ஆராய்ந்​து, தமிழகத்​தின் பெரு​மைமிகு வரலாற்றை வெளி​கொண்டு வரும் வகையி​லான ஆராய்ச்​சியை ஓராண்​டுக்கு மாதம் ரூ. 50,000 உதவித்​தொகையுடன் மேற்​கொள்​வதற்கு முதுகலை பட்​ட​தா​ரி​கள் அல்​லது தனி​நபர் ஆராய்ச்​சி​யாளர்​களிட​மிருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

இதற்​கான விண்​ணப்​பப் படிவம், தகுதி மற்​றும் பிற விவரங்​கள் www.tamilnaduarchives.tn.gov.in என்ற இணை​யதளத்தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *