தற்​போது வரை பெய்த கனமழை​யால் 20 ஆயிரம் ஹெக்​டேர் பயிர்​கள் நீரில் மூழ்​கி​யிருக்​கின்​றன – உயி​ரிழப்​பு​களை தவிர்க்க அரசு முழு​வீச்​சில் செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது!! துணை முதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை:
கனமழையால் தமிழகத்​தில் 20 ஆயிரம் ஹெக்​டர் பயிர்​கள் நீரில் முழ்​கி​யுள்​ளன. வெள்​ளம் வடிந்​ததும் கணக்​கெடுப்பு நடத்தப்படும் என துணை முதல்​வர் உதயநிதி தெரி​வித்​துள்​ளார்.

சென்னை எழிலகத்தில் செயல்​பட்டு வரும் மாநில அவசர​கால செயல்​பாட்டு மையம், மாநக​ராட்​சி​யில் இயங்கி வரும் கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையம் ஆகிய​வற்​றில் டிட்வா புயலை எதிர்கொள்​வதற்​காக மேற்​கொள்​ளப்​பட்டு வரும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்​வர் உதயநிதி நேற்று முன்​தினம் நள்​ளிரவு ஆய்வு மேற்​கொண்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: புயல் தமிழகத்​தின் கடலோர மாவட்​டங்​கள் வழி​யாக நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது​வரை அதி​கபட்​ச​மாக நாகப்​பட்​டினத்​தில் 30 செ.மீ அளவுக்கு மழை பதி​வாகி​யுள்​ளது. தமிழகத்​தின் நீர்த்​தேக்​கங்​களில் தற்​போது 85 சதவீதம் நீர்இருப்பு உள்​ளது.

இதனால் பயப்​படும்​படி​யான சூழல் ஏது​வுமில்​லை. கனமழை காரண​மாக நிவாரண பணி நடவடிக்​கைகளை மேற்​கொள்ள 16 மாநில பேரிடர் மீட்பு படை, 12 தேசிய பேரிடர் மீட்பு படை கடலோர மாவட்​டங்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன.

பேரிடர் சூழலை திறம்பட கையாள்​வதற்கு கூடு​தலாக 10 தேசிய பேரிடர் மீட்பு படைக்​கும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

மீட்பு பணி​களுக்​காக 1,185 படகு​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அதிக மழை எதிர் ​கொண்ட மாவட்​டங்​களில் 26 நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​பட்​டு, அதில் மொத்​தம் 1,836 பேர் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்​களுக்கு தேவை​யான குடிநீர், உணவு உள்​ளிட்ட வசதிகள் செய்து கொடுக்​கப்​பட்​டுள்​ளன. அவர்​களுக்​காக 5 லட்​சம் 5 கிலோ அரிசி பாக்​கெட்​டு​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

உயி​ரிழப்​பு​களை தவிர்க்க அரசு முழு​வீச்​சில் செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது. தற்​போது வரை பெய்த கனமழை​யால் 20 ஆயிரம் ஹெக்​டேர் பயிர்​கள் நீரில் மூழ்​கி​யிருக்​கின்​றன. வெள்​ளம் வடிந்​ததும் இதுதொடர்​பான கணக்​கெடுப்பு நடத்​தப்​படும்.

அரசு எடுக்​கும் நடவடிக்கைகளுக்​கும் மக்​கள் முழு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த ஆய்​வில் அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன், துறை செயலர் எம்​.​சாய்​கு​மார், சிறப்​புத்​ திட்ட செய​லாக்​கத் துறை செயலர் பிரதீப் யாதவ், மேலாண்மை துறை ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன், மாநக​ராட்சி ஆணை​யர்​ ஜெ.குமரகுருபரன்​ உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *