டிட்வா புய​லால் பாதிக்​கப்​பட்​ட இலங்கை மக்​களுக்கு துணை நிற்க தமிழகம் தயா​ராக உள்​ளது – முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

சென்னை:
டிட்வா புய​லால் பாதிக்​கப்​பட்​ட இலங்கை மக்​களுக்கு துணை நிற்க தமிழகம் தயா​ராக உள்​ளது என்று முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: டிட்வா புயல் காரண​மாக நமது அண்டை நாடான இலங்கை பேரழி​வைச் சந்​தித்​துள்​ளது.

அங்கு 100-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்துள்​ளனர். பல இடங்​கள் கடும் பாதிப்​புக்கு உள்​ளாகி மக்​கள் அவதி​யுறுகின்றனர். இந்த இயற்​கைச் சீற்​றத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​வதோடு, இலங்கை மக்​களின் இந்த பெருந்​துயரில் தமிழக​மும், தமிழக மக்​களும் பங்​கெடுக்​கிறோம்.

இலங்​கை​யில் சிக்​கித் தவிக்​கும் தமிழகத்தைச் சேர்ந்த பயணி​களை மீட்க அயல​கத் தமிழர் நலன், மறு​வாழ்​வுத் துறை சார்​பில் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டு, நவ.11-ம் தேதி முதல்​கட்​ட​மாக 113 ஆண்​கள், 60 பெண்​கள், 4 குழந்​தைகள் என மொத்​தம் 177 பேர் தமிழகத்​துக்கு திரும்ப அழைத்து வரப்​பட்​டுள்​ளனர்.

டிட்வா புய​லால் பாதிக்​கப்​பட்​டுள்ள இலங்கை மக்​களுக்கு மத்​திய அரசின் மூலம் உணவுப் பொருட்​கள், மருந்​துப்பொருட்​கள் உள்​ளிட்​ட​வற்றை வழங்​கி, அவர்​கள் மீண்​டெழு​வதற்கு உதவிக்கரம் நீட்ட தமிழக அரசு தயா​ராக இருக்​கிறது.

இதற்​காக மத்​திய அரசுடன் இணைந்து செயல்பட அதி​காரி​கள் குழுவை அமைக்​கு​மாறு தலை​மைச் செயலருக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளேன். இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *